Friday, August 20, 2010

சிரிக்க சிரிக்க:)


அமைச்சர்: மன்னா எதிரி நாட்டு மன்னர் ஓலை அனுபிருக்கிறார்
புலிகேசி : அப்படியா? அரண்மனைக்கு கான்கிரிட் போட்டாச்சி என்று திருப்பி அனுப்பிவிடு.

Monday, July 19, 2010

உண்மையான நண்பன் யார்?


1935 இல் அமெரிக்க பாராளுமன்றத்தில் 'ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்று கிழமையை ஒவ்வொரு ஆண்டும் பிரண்ட்ஷிப் டே வாக கொண்டாட வேண்டும்' என்று தீர்மானம் போட்டு, அதை உலகம் முழுவதும் பரவ செய்தவர்கள் அமெரிக்கர்களே.

நட்பாக இருந்தாலும், மற்ற ஊறவுகளாக இருந்தாலும் அதிகம் நெருங்கி கொள்ளாதவரை அமைதி தான். நெருங்காதவரை ஆதாம் ஏவாள் கூட நண்பர்களாக தான் இருந்தார்கள் என்கிறது, மனிதன் உருவானதை சொல்லும் ஜெனசிஸ் கோட்பாடு.

' நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க எனக்கு வழிகாட்டுங்கள்' என்று தன்னிடம் வந்த பக்க்தனிடம் ஒரு முனிவர் இப்படி சொன்னார். " ஓ, தெரியுமே. நண்பன் என்றால் ஆங்கிலத்தில் பிரண்ட்; அல்பேனியாவில் மிக், ஆப்பிரிகாவில் விரன்ட், சீனாவில் பேங்க்யு, பிரான்சில் அமி, ஜெர்மனியில் பிரென்ட், இத்தாலியில் அமிக்கோ, ஜப்பானில் டோமொடக்சி, கொரியாவில் ஜிங்கு, ரசியாவில் பிரிஜிதல், லதின்னில் அமிக்கஸ், சமஸ்கிருதத்தில் மித்ரா, இந்தியில் தோஸ்த். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு தெரியாது, உண்மையான நண்பன் யார் என்று" என்றார் அவர்.

ஆனாலும் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ' தி 1828 நோ வெப்ஸ்டர் டிக்ஸ்னரி' விளக்கும் நண்பனுக்கான இலக்கணத்தை வைத்து பார்த்தால் சில தெளிவுகள் கிடைக்கும்.
***குழப்பத்தில் நம்மை தெளிய வைக்கவும், நாம் பயப்படும்போது நமக்கு தைரியம் சொல்லவும், நாம் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை செய்யவும், நாம் இல்லாதபோது நம்மை நினைக்கவும், நாம் மறந்ததை நமக்கு நினைவுபடுத்தவும், அசாதாரண உதவிகளை நமக்கு செய்யவும், நாம் தவறு செய்தாலும் நம்மை விட்டு பிரியாமல் இருக்கவும், நாம் அழும்போது நம்மை சிரிக்க வைக்கவும் தயாராக இருப்பவர்களே நண்பர்கள்.

இதை சொல்லும்போதே மிண்டும் ஒருமுறை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். மேற்குறிபிட்ட எல்லா தகுதிகளும் நமக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் நண்பர்கள் கிடைப்பார்கள் நிலைபார்கள்.
***தினத்தந்தி***

Monday, June 7, 2010

கடவுளும் கந்தசாமியும்!!


கந்தசாமி தீவிர சிவ பக்தர். தினமும் காலை முதல் இரவு வரை இறைவனை வழிபட தவற மாட்டார். இருப்பினும் மனைவி மக்களுடன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வநதார். ஒரு சமயம் உமையவள் அவரது கஷ்டங்களை போக்கி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவ பெருமான் அவனது விதி படி அவன் இன்னும் சில ஆண்டு காலம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் அதுவரை அவனுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார். ஆனால் பார்வதி மனம் இதை ஏற்கவில்லை, எனவே பார்வதியை சமாதானபடுத்த சிவபெருமான் நீ வேண்டுமானால் கந்தசாமிக்கு உதவி செய் என்றார். பார்வதி கந்தசாமிக்கு உதவுவதற்காக சரியான தருணத்தை எதிர் நோக்கிகொண்டிருந்தார். ஒரு முறை கந்தசாமி தனது பணிகளை முடித்து விட்டு வீடு திரும்மி கொண்டிருந்தார். இரவு வேளையாக ஆகிவிட்டது. பார்வதி அவனுக்கு உதவுவதற்கு இது தக்க சமயம் அங்கு வேறு யாரும் இல்லை. கந்தசாமி செல்லும் வழியில் ஒரு மூட்டை நிறைய பொற்காசுகளை போட்டார்.
*********நமது கந்தசாமிக்கு திடீர் என ஒரு சிந்தனை, நாம் ஆரோகியமான உடலுடன் கை, கால்கள், இருந்தும் கஷ்டபடுகிறோம், ஆனால் உலகில் எவ்வளவோ மக்கள் இவைக்களுமின்றி, இதைவிட கஷ்டபடுகிரார்களே, சில நிமிடங்கள் நாமும் அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து பார்த்தால் என்ன? என தோன்ற, அது வரை ஒழுங்காக சென்றவன் அப்போது தனது கண்களை மூடி கொண்டு பார்வையற்றவர்போல் நடக்க ஆரம்பித்துவிட்டான்...............
***எங்கோ கேட்டது ***

Monday, April 19, 2010

கருணைக் கொலைகள்

பெண் குழந்தை பிறந்தால் நெல் மணிகளை வாயில் போட்டு பால் ஊற்றி கொன்றுவிடும் பழக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் பரவியிருந்தது விழிப்புணர்வு பிரசாரத்திலும், சிசுவதை தடுப்பு சட்டத்தை கடுமையுடன் அமல் படுதியதாலும் அந்த கொடுமை கட்டுக்குள் வந்தது. இப்போது, முதியவர்களை அவர்களின் குழந்தைகளே கொலை செய்யும் பழக்கம் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகிருக்கிறது. 80 வயது தாண்டிய பெரியவர் வீட்டில் மகன்களும் குடும்பத்தினரும் கூடி பேசி இருக்கிறார்கள். மறுநாள் பெரியவருக்கு 'தலைக்கூத்துதல்' நடத்தி, பிறகு சொத்துகளை பிரித்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததை கேட்ட பெரியவர் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பி வெளியூரில் உள்ள நண்பர் விட்டில் தஞ்சம் அடைந்தாராம். தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவது தலைக்கூத்துதல்- தலைக்கு ஊற்றுதல்- என்கிறார்கள். ஆரோகியமான உடலையும் பலவினமாக்கும் இந்த குளியல். அதோடு அந்த நபருக்கு இரண்டு கப் இளநீர் கொடுத்தால் ஜன்னி வரும்; சிறுநீரகம் செயலிழக்கும். புளித்த தயிர் ஊற்றிய பழையது கொடுப்பதும் உண்டு . பிறகு அந்த உடலில் உயிர் தங்காது. தென் மாவட்டங்களில் இது சகஜம் என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் சொல்கிறார். ஆனால் சொத்துக்காக செய்வதில்லையாம். 'ரெம்ப வயதாகி, நோயில் ஊடல் நலிந்து இழுத்துக் கொண்டிருக்கும் நபருக்கு அந்த சித்தரவதையில் இருந்து விடுதலை கொடுப்பது இந்த ஏற்பாடு. கருணை கொலை என்று வேண்டுமானால் சொல்லலாம்' என்கிறார் அவர். குடும்பத்தினர் உறவினர்கள் கூடி பேசி நல்ல நேரம் பார்த்து பேரக் குழந்தை கையால் 'ஒரு மடக்கு சூடான பால் கொடுத்து முடித்து வைப்பதும்' உண்டு என்கிறார்கள்.
கருணைக் கொலையை சட்டப்படி அங்கீகரிக்கலாமா கூடாதா என்ற விவாதம் மேலை நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும்போதே, இங்கே அது எந்தனையோ ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஓவ்வொரு சமூகமும் சில சம்பிரதாயங்களை கைக்குள் பொதிந்து பாதுகாக்கிறது. வெளியாருக்கு எட்டாத ரகசியங்களாக அவை தலை முறைகளை தாண்டி பயணிக்கின்றன.
[(மனித உரிமை கங்காணி Feb 2010) (தினகரன் 27.01.2010) ]

Wednesday, April 7, 2010

சிரிக்கவும், சிந்திக்கவும்

தண்டனைக்குப் பிறகு சிரிப்பா?

ஒரு அரசர் திடீர் , தீடிர் என்று சில அறிவிப்புகளை அவ்வபோது கொடுத்து மக்களை அதிர்ச்சி அடைய வைப்பார். அதுபோல ஒருமுறை இதுவரை சுவைக்காத பழத்தை கொண்டு வந்து தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே சாப்பிட்ட பழத்தை கொண்டு வந்தால் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அரசர். அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் பரிசு பெறவேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொருவரும் விதவிதமான பழங்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் பப்பாளி பழத்தை கொண்டு வந்தார். அதை கண்ட மன்னர் கோபத்துடன் பப்பாளி தான் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதால், கொண்டு வந்தவருக்கு தண்டனை தருவதற்காக அவருடைய வாயில் பப்பாளி பழத்தை வைத்து அழுத்த சொன்னார். ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது. தண்டனையையும் பொருட்படுத்தாமல் அந்த மனிதர் சிரித்தார். மன்னருக்கோ கோபம் இன்னும் அதிகமாகியது. தண்டனை கொடுத்ததற்கு ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். மன்னர் எனக்கு பின்னால் ஒருவர் கையில் பலாபழத்தை வைத்துகொண்டு நிற்கிறார். அதுவும் நீங்கள் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதை நினைத்துக் கொண்டேன் ! என்றார் சிரித்துகொண்டே.

நன்றி சகோதரி சோனா

********

Tuesday, April 6, 2010

சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம்


**சிரிப்பு மற்றவரை கவரும்.
**நம் மனநிலையை மாற்றும்.
**இது ஒரு தொற்று நோய் போல் சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும்.
**மன அழுத்தத்தை குறைக்கும்.
**எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
**இரத்த அழுத்தம் குறையும்.
**உடம்பு வலி குறையும்.
**இளமையாக காட்டும்.
**சிரிப்பவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.
**தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
**சிந்தனையை தெளிவுபடுத்தும்.
**இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.
**அதிக அளவில் நன்மைகளை பெற செய்யும். ஆகவே கோபத்தை குறைத்து சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம்.
மகளிர் உங்கள் சாய்ஸ் ஜன 2010
.

Monday, February 8, 2010

நட்பு ஒரு ஆய்வு


நட்பு ஒரு ஆய்வு
நட்பு முன்றேழுத்து மந்திர சொல். பிறவியை தந்ததால் தாய் தந்தையர், ஒன்றாக வளரும் சூழ்நிலையில் சகோதர சகோதரிகள், நம்மை சமுகத்தில் அங்கீகரிக்க உறவுகள் இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு பலனும் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உணர்வோடு கலந்த இன்னுமொரு உயிர் நட்பு. நல்ல நட்பு என்பது கறந்த பாலை போன்று புனிதமானது.

பல்வேறுபட்ட மக்கள் வாழும் உலகில் நாம் சந்திக்கும் நட்பு வட்டாரம் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குணாதிசயம்.

உலகமே புரியாத பள்ளி பருவத்திலிருந்து கல்லுரி வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் போது மனிதர்களை புரிந்து கொள்ள இயலாமல் சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதுபடுத்தி கோபபடுவதும் பெரிய விஷயங்களை மிக சாதரணமாக எடுத்துக்கொள்வதும் ஒரு விந்தையான பருவமே. காலங்கள் மாறும்போது தெரிகிறது நிறைய கோமாளித்தனங்களை நாம் வாழ்கையில் செய்திருப்பது.

துன்பத்தில் வாடும் மனதை ஒரு குழந்தையாய் கருதி ஆறுதல் அளிக்கும் நட்பு, விளையாட்டில் வெற்றி பெற்றபோது ஓடிவந்து ஆரத்தழுவி பாராட்டிய நட்பு, சண்டை போடவே முன்று ஆண்டு காலமும் போதாமல் ஒரு நட்பு, உடன் பிறப்பாய் ஒரு நட்பு, தொல்லை கொடுக்க ஒரு நட்பு, தோள் கொடுக்க ஒரு நட்பு, கூட்டத்தையே கலகலப்பாக சிரிக்க வைக்கும் நட்பு, நட்பே உனக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்?

ஆண் பெண் நட்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-
கடலில் திசை தெரியாமல் தத்தளிக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்காய் ஒளி கொடுக்கும் நட்பு எல்லோருக்கும் இயல்பாய் அமைவதில்லை அமையாதவிடத்தில் பல தெளிவுகளை நாம் உணர வேண்டும்.

***ஆண் பெண் இருவருக்குள்ளும் இயல்பான நட்பு உருவாகி காலபோக்கில் அந்த நட்பில் ஒருவர் உள்ளத்தில் மட்டும் காதலாய் உருவெடுத்து நிற்கும். இப்பிரச்சனையை திர்க்க காதலை உணரும் பட்சத்தில் வெளிபடையாக பேசி மனதில் உள்ள குழப்பத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பதே சிறந்தது.

***ஆரோக்கியமான நட்பை உடன் இருக்கும் நட்பு வட்டாரங்கள் காதலாய் சித்தரிப்பது. இங்கு பிரச்சனை இருவருக்கு மட்டும் அல்ல நட்பிர்க்கும்தான். சில சமயம் இதனால் இருவர் மனதிலும் தனித்தனியாக ஒருவர் மிது மற்றொருவரின் சந்தேக பார்வை ஏற்படுவதுண்டு. இவைகளை தடுக்க ஆரம்பத்திலேயே நட்பு வட்டாரத்திடம் தெளிவாக உங்கள் நட்பை விளக்கி கேலி பேசுக்களுக்கு இடமளிக்காமல் இருத்தல் நன்று.

***அடுத்து எங்கு நாம் நம் நண்பர்/ நண்பியை காதலித்து விடுவோமோ என்னும் பயம். மேலும் அவரும் நம்மை காதலிப்பாரோ என்ற பயம் கலந்த சந்தேகம். பிரச்சனையை போக்க அன்று வரை நல்ல நண்பர்களாய் இருந்தவர்களில் ஒருவர் மட்டும் மற்றொருவரை விட்டு விலகி செல்வது அல்லது அவர்களை ஊதாசினபடுத்துவது. இதனால் மற்றொருவர் மிகுந்த மனக்குழப்பதிலும் வேதனையிலும் ஆழ்வது உண்டு. உண்மையான நட்பிற்கு புரிதல் மிக அவசியம். எனவே தம் மனநிலை என்ன என்பதை அவரிடம் வெளிப்படையாக பேசிவிட்டு தேவைப்பட்டால் சிறிது விலகி இருப்பதும் நலமே. அதை விட்டுவிட்டு நாமாகவே ஒரு கணிப்பை உருவாக்கி கொள்வது பெரும்பாலும் தவறான முடிவையே தரும்.

*** நட்பில் ஆண் பெண் இருவருக்குள்ளும் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருப்பதே நலம். எல்லை இல்லாத நட்பு என்பது சேரும்மிடம் தெரியாமல் பயணிப்பது போன்றது. நம்மை துயரில் ஆழ்த்த நாமே வழி அமைப்பதாகும். அர்த்தமற்ற தொடுதல்கள் இல்லாதிருப்பதே அவர்களுக்கும், சமுகத்தில் இருக்கும் அவர்கள் நட்பிற்கான அங்கிகாரதிர்க்கும் பாதுகாப்பாய் அமையும்.
மேலும் நட்பில் பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நன்று. ஏனெனில் உங்கள் ஆறுதலுக்காக உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இதர விஷயங்களை கூறினாலும் கேட்பவரின் உள்ளத்தில் உங்களை பற்றிய (நன்)மதிப்பு என்னும் உருவம் பதிந்துவிடும் வாய்ப்பு கிடைக்காதவரை மட்டுமே நல்லவர்களாக இருப்பவர்கள் வாழும் உலகம் இது. ஒரு நாள் உங்கள் சந்தோசம் கேள்விக்குறியாக மாறும் நிலையை ஊருவாக்கிவிடாதிர்கள்.
நினைவில் இருக்கட்டும் இன்று உங்கள் துயர் துடைக்கும் என நீங்கள் என்னும் நட்பு ஒரு நாள் உங்கள் செயல்களை குத்திகாட்டி பேச கூடும். ஆணோ பெண்ணோ உங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைத்தையும் தாண்டிய அந்தரங்கத்தை பகிராதிர்கள்.

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு சுதந்திரம் உண்டு நம் சுய எல்லைக்குள் எவரையும் அனுமதிக்க கூடாது. உதரணமாக என் தோழி தன் சக தோழியின் முன்பே தனது PIN no பதிவு செய்து ATM இல் பணம் எடுப்பாள் . ஒரு நாள் அவளது ATM அட்டையையும் காணவில்லை அவள் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் காணவில்லை. ஏன் இந்நிலை? தனக்கு கொடுக்கப்பட்ட ரகசிய என்னை பிறருக்கு காண்பித்தது தேவையா? இங்கு கவனிக்கப்படவேண்டிய மற்றொன்று ஒருவேளை சக தோழி தவறு செய்யாதவராக இருந்திருந்தால் அவளின் மிதான சந்தேக பார்வை நட்பையே குலைத்து விட்டது. மேலும் சிலர் தங்கள் மின்னஞ்சல் முகவரியின் பயனபெயர் கடவுப்பெயர் ஐ நண்பர்களிடம் கூறுகிறார்கள். இங்கு உங்களை பற்றியும், உங்களுக்குவரும் தகவல்கள் அனைத்தையும் தவறாக பயன்படுத்த வழிவகுப்பவராக மாறி விடுகிரிர்கள். நினைவில் இருக்கட்டும் மினஞ்சல் என்பது உங்கள் அந்தரங்கம் மட்டும் அல்ல உங்களை நம்பி தகவல்கள் அனுப்பும் உங்கள் தோழர்கள் / தோழிகள் / அலுவலர்கள் என பலரின் செய்திகளும் அடங்கியவை. உங்களை நம்பி தகவல் அனுப்புபவர்களின் நம்பிக்கையை காக்க வேண்டியது உங்கள் கடமை.

சந்தோசத்திலேயே மிக பெரிய சந்தோசம் மற்றவரை சந்தோசபடுத்தி பார்பதுதான். எப்போதும் கலகலப்பாக இருங்கள் பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் வாழ்கையில் வெற்றி தோல்வி இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதை உணருங்கள். தோல்வி, துக்கங்களை ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தயும், வெற்றி பெற்றால் சமநிலையில் இருக்கும் மனபக்குவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். ஆபத்து காலத்தில் நண்பனின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ளலாம், அதுபோல் தோல்வி ஏற்படும் போது உங்களை பற்றி முழுமையாக உணர்வீர்கள்.

எந்த பிரச்சனை வந்தாலும் வார்த்தைகளை விடாமல் இருப்பதே நல்லது. என்னெனில் "நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லை கொட்டினால் அல்ல இயலாது" கூறிய வார்த்தைகள் சாகும் வரை மறக்காது. காயபடுத்தும் குணம் சொல்லிற்கு மட்டும் அல்ல மவுனத்திற்கும் அதிகம் உண்டு. பிடிக்கவில்லை எனில் அதை கூறிவிட்டு பிரிவதும் பழகிய நடப்பிக்கு கொடுக்கும் மரியாதையே ஆகும்.

உங்கள் நண்பன்/நண்பியை அதிகம் நேசிக்காதிர்கள் என்னெனில் நாளை அவர்கள் உங்கள் விரோதியாக மாறலாம்..உங்கள் விரோதியை அதிகம் வெருக்காதிர்கள் என்னெனில் அவர்கள் நாளை உங்கள் நண்பன் ஆகலாம்..--கீதை

நட்பை ஒரு பறவையாக கருதுவோம், பறவை விரும்புவது சுதந்திரமாக பறப்பதையே நம்மீது அன்பு இருந்தால் அப்பறவை நம்மை தேடி நிச்சயம் வரும் எனவே நட்பை கூண்டிற்குள் அடைத்து காத்திட முடியும் என எண்ண வேண்டாம். அதற்கான சுதந்திரத்தை கெடுக்காமல் அதன் ஆனந்தத்தை கண்டு மகிழுங்கள்.

நண்பர் நண்பி தவறான பாதையில் சென்றால் அவர்கள் செய்வது தவறு என சுட்டிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. அதே சமயம் அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லையெனில் உங்கள் நிம்மதியையும் கெடுத்து கொள்ள வேண்டாம் ஆரோக்கியமான முறையில் கூறியும் கேட்கவில்லையெனில் நிங்களாகவே விலகிக்கொள்வதும் நன்மை பயக்கும்.

நட்பு இருவருக்குள் இருக்கும் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. இன்று நம்மை புரிந்து கொள்ளாமல் விலகி செல்பவர்களை கூட காலம ஒரு நாள் நம்மிடம் அற்புதமான நண்பர் / நண்பியாய் நமக்கு திருப்பி தரலாம், எனவே புரிந்துகொள்ளாத நட்பை காலத்தின் கைகளில் விட்டுவிடலாம்.

இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும் எனவே தவறு செய்து பின் திருந்தி வாழ என்னும் தோழமையை மனித்து மறந்து ஏற்றுக்கொள்வதே நலம்


"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
தவறு செய்தவரை தண்டிப்பது என்பது அவர்கள் செய்த தவறை எண்ணி வருந்தும் விதமாக அவருக்கு நன்மையை செய்வதாகும் (திருக்குறள் 314) .

எப்போதும் நல்ல எண்ணங்களையே வைத்திடுங்கள் விரோதிக்கும் நம்மையே செய்யுங்கள்.

ஒருவரை தண்டிப்பதற்கு முன் பல முறை யோசியுங்கள் ஒருவரை மனிப்பதர்க்கு ஒரு துளி கூட யோசிக்காதிர்கள் (அன்னை தெரசா).