Monday, April 19, 2010

கருணைக் கொலைகள்

பெண் குழந்தை பிறந்தால் நெல் மணிகளை வாயில் போட்டு பால் ஊற்றி கொன்றுவிடும் பழக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் பரவியிருந்தது விழிப்புணர்வு பிரசாரத்திலும், சிசுவதை தடுப்பு சட்டத்தை கடுமையுடன் அமல் படுதியதாலும் அந்த கொடுமை கட்டுக்குள் வந்தது. இப்போது, முதியவர்களை அவர்களின் குழந்தைகளே கொலை செய்யும் பழக்கம் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகிருக்கிறது. 80 வயது தாண்டிய பெரியவர் வீட்டில் மகன்களும் குடும்பத்தினரும் கூடி பேசி இருக்கிறார்கள். மறுநாள் பெரியவருக்கு 'தலைக்கூத்துதல்' நடத்தி, பிறகு சொத்துகளை பிரித்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததை கேட்ட பெரியவர் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பி வெளியூரில் உள்ள நண்பர் விட்டில் தஞ்சம் அடைந்தாராம். தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவது தலைக்கூத்துதல்- தலைக்கு ஊற்றுதல்- என்கிறார்கள். ஆரோகியமான உடலையும் பலவினமாக்கும் இந்த குளியல். அதோடு அந்த நபருக்கு இரண்டு கப் இளநீர் கொடுத்தால் ஜன்னி வரும்; சிறுநீரகம் செயலிழக்கும். புளித்த தயிர் ஊற்றிய பழையது கொடுப்பதும் உண்டு . பிறகு அந்த உடலில் உயிர் தங்காது. தென் மாவட்டங்களில் இது சகஜம் என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் சொல்கிறார். ஆனால் சொத்துக்காக செய்வதில்லையாம். 'ரெம்ப வயதாகி, நோயில் ஊடல் நலிந்து இழுத்துக் கொண்டிருக்கும் நபருக்கு அந்த சித்தரவதையில் இருந்து விடுதலை கொடுப்பது இந்த ஏற்பாடு. கருணை கொலை என்று வேண்டுமானால் சொல்லலாம்' என்கிறார் அவர். குடும்பத்தினர் உறவினர்கள் கூடி பேசி நல்ல நேரம் பார்த்து பேரக் குழந்தை கையால் 'ஒரு மடக்கு சூடான பால் கொடுத்து முடித்து வைப்பதும்' உண்டு என்கிறார்கள்.
கருணைக் கொலையை சட்டப்படி அங்கீகரிக்கலாமா கூடாதா என்ற விவாதம் மேலை நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும்போதே, இங்கே அது எந்தனையோ ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஓவ்வொரு சமூகமும் சில சம்பிரதாயங்களை கைக்குள் பொதிந்து பாதுகாக்கிறது. வெளியாருக்கு எட்டாத ரகசியங்களாக அவை தலை முறைகளை தாண்டி பயணிக்கின்றன.
[(மனித உரிமை கங்காணி Feb 2010) (தினகரன் 27.01.2010) ]

Wednesday, April 7, 2010

சிரிக்கவும், சிந்திக்கவும்

தண்டனைக்குப் பிறகு சிரிப்பா?

ஒரு அரசர் திடீர் , தீடிர் என்று சில அறிவிப்புகளை அவ்வபோது கொடுத்து மக்களை அதிர்ச்சி அடைய வைப்பார். அதுபோல ஒருமுறை இதுவரை சுவைக்காத பழத்தை கொண்டு வந்து தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே சாப்பிட்ட பழத்தை கொண்டு வந்தால் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அரசர். அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் பரிசு பெறவேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொருவரும் விதவிதமான பழங்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் பப்பாளி பழத்தை கொண்டு வந்தார். அதை கண்ட மன்னர் கோபத்துடன் பப்பாளி தான் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதால், கொண்டு வந்தவருக்கு தண்டனை தருவதற்காக அவருடைய வாயில் பப்பாளி பழத்தை வைத்து அழுத்த சொன்னார். ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது. தண்டனையையும் பொருட்படுத்தாமல் அந்த மனிதர் சிரித்தார். மன்னருக்கோ கோபம் இன்னும் அதிகமாகியது. தண்டனை கொடுத்ததற்கு ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். மன்னர் எனக்கு பின்னால் ஒருவர் கையில் பலாபழத்தை வைத்துகொண்டு நிற்கிறார். அதுவும் நீங்கள் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதை நினைத்துக் கொண்டேன் ! என்றார் சிரித்துகொண்டே.

நன்றி சகோதரி சோனா

********

Tuesday, April 6, 2010

சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம்


**சிரிப்பு மற்றவரை கவரும்.
**நம் மனநிலையை மாற்றும்.
**இது ஒரு தொற்று நோய் போல் சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும்.
**மன அழுத்தத்தை குறைக்கும்.
**எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
**இரத்த அழுத்தம் குறையும்.
**உடம்பு வலி குறையும்.
**இளமையாக காட்டும்.
**சிரிப்பவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.
**தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
**சிந்தனையை தெளிவுபடுத்தும்.
**இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.
**அதிக அளவில் நன்மைகளை பெற செய்யும். ஆகவே கோபத்தை குறைத்து சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம்.
மகளிர் உங்கள் சாய்ஸ் ஜன 2010
.