Sunday, November 22, 2009

கீதாசாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு

எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகும்.

இந்த மற்றம் உலக நியதியாகும்.

-----பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்









Thursday, November 19, 2009

கையெழுத்தும் குணநலன்களும்

எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.


  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
  • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
  • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
  • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
  • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
  • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
  • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
  • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
  • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
  • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
  • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
  • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

-எங்கோ படித்ததில் ரசித்தது

Sunday, November 8, 2009

ரூபாய் நோட்டு

கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி?


ரூபாய் நோட்டின் எண்ணின் அளவை நல்ல நோட்டோடு ஒப்பிட்டால் அதில் மாற்றங்கள் காணப்படும். நோட்டை
விரல்களால் நசுக்கி, சுண்டிப் பார்க்கும் போது வரும் சத்தத்தில் வித்தியாசம் தெரியும்.

நோட்டின் வெள்ளைப் பகுதியை வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் காந்தி படம் தெரியும். நல்ல நோட்டில், கண்ணாடியின் பின்னால் இருந்து காந்தி பார்ப்பது போல் தெரியும். கள்ள நோட்டில் இது கார்ட்டூன் படம் போல் இருக்கும்.
நோட்டின் நடுவில் உள்ள பாதுகாப்பு வெள்ளி இழையின் நடுவே ஆர். பி. ஐ. என்று அங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு இருக்கும் . ஆயிரம் ரூபாய் நோட்டில் அந்த ரூபாயின் மதிப்பும் அதில் எழுதப்பட்டு இருக்கும். கள்ள நோட்டில் இது இருக்காது.

ரூ.500 ௦௦ மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் உள்ள கையெழுத்து நேராக காணும்போது பச்சையாக இருக்கும். சற்று சாய்த்து பார்த்தால் கருநீலமாக நிறம் மாறும். கள்ள நோட்டில் நிறம் மாறாது.

ரிசர்வ் வங்கி என்று அச்சிடப்பட்டு உள்ள எழுத்தை தடவிப்பார்த்தால் மேடாக உணரப்படும் கள்ள நோட்டில் அப்படி இருக்காது.

Monday, November 2, 2009

SMILE:)

S-Sets you free!
M-Makes you special!
I-Increases your face value!
L-Lifts up your spirits!
E-Erases all your tensions!
So keep smiling……..