Monday, February 8, 2010

நட்பு ஒரு ஆய்வு


நட்பு ஒரு ஆய்வு
நட்பு முன்றேழுத்து மந்திர சொல். பிறவியை தந்ததால் தாய் தந்தையர், ஒன்றாக வளரும் சூழ்நிலையில் சகோதர சகோதரிகள், நம்மை சமுகத்தில் அங்கீகரிக்க உறவுகள் இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு பலனும் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உணர்வோடு கலந்த இன்னுமொரு உயிர் நட்பு. நல்ல நட்பு என்பது கறந்த பாலை போன்று புனிதமானது.

பல்வேறுபட்ட மக்கள் வாழும் உலகில் நாம் சந்திக்கும் நட்பு வட்டாரம் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குணாதிசயம்.

உலகமே புரியாத பள்ளி பருவத்திலிருந்து கல்லுரி வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் போது மனிதர்களை புரிந்து கொள்ள இயலாமல் சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதுபடுத்தி கோபபடுவதும் பெரிய விஷயங்களை மிக சாதரணமாக எடுத்துக்கொள்வதும் ஒரு விந்தையான பருவமே. காலங்கள் மாறும்போது தெரிகிறது நிறைய கோமாளித்தனங்களை நாம் வாழ்கையில் செய்திருப்பது.

துன்பத்தில் வாடும் மனதை ஒரு குழந்தையாய் கருதி ஆறுதல் அளிக்கும் நட்பு, விளையாட்டில் வெற்றி பெற்றபோது ஓடிவந்து ஆரத்தழுவி பாராட்டிய நட்பு, சண்டை போடவே முன்று ஆண்டு காலமும் போதாமல் ஒரு நட்பு, உடன் பிறப்பாய் ஒரு நட்பு, தொல்லை கொடுக்க ஒரு நட்பு, தோள் கொடுக்க ஒரு நட்பு, கூட்டத்தையே கலகலப்பாக சிரிக்க வைக்கும் நட்பு, நட்பே உனக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்?

ஆண் பெண் நட்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-
கடலில் திசை தெரியாமல் தத்தளிக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்காய் ஒளி கொடுக்கும் நட்பு எல்லோருக்கும் இயல்பாய் அமைவதில்லை அமையாதவிடத்தில் பல தெளிவுகளை நாம் உணர வேண்டும்.

***ஆண் பெண் இருவருக்குள்ளும் இயல்பான நட்பு உருவாகி காலபோக்கில் அந்த நட்பில் ஒருவர் உள்ளத்தில் மட்டும் காதலாய் உருவெடுத்து நிற்கும். இப்பிரச்சனையை திர்க்க காதலை உணரும் பட்சத்தில் வெளிபடையாக பேசி மனதில் உள்ள குழப்பத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பதே சிறந்தது.

***ஆரோக்கியமான நட்பை உடன் இருக்கும் நட்பு வட்டாரங்கள் காதலாய் சித்தரிப்பது. இங்கு பிரச்சனை இருவருக்கு மட்டும் அல்ல நட்பிர்க்கும்தான். சில சமயம் இதனால் இருவர் மனதிலும் தனித்தனியாக ஒருவர் மிது மற்றொருவரின் சந்தேக பார்வை ஏற்படுவதுண்டு. இவைகளை தடுக்க ஆரம்பத்திலேயே நட்பு வட்டாரத்திடம் தெளிவாக உங்கள் நட்பை விளக்கி கேலி பேசுக்களுக்கு இடமளிக்காமல் இருத்தல் நன்று.

***அடுத்து எங்கு நாம் நம் நண்பர்/ நண்பியை காதலித்து விடுவோமோ என்னும் பயம். மேலும் அவரும் நம்மை காதலிப்பாரோ என்ற பயம் கலந்த சந்தேகம். பிரச்சனையை போக்க அன்று வரை நல்ல நண்பர்களாய் இருந்தவர்களில் ஒருவர் மட்டும் மற்றொருவரை விட்டு விலகி செல்வது அல்லது அவர்களை ஊதாசினபடுத்துவது. இதனால் மற்றொருவர் மிகுந்த மனக்குழப்பதிலும் வேதனையிலும் ஆழ்வது உண்டு. உண்மையான நட்பிற்கு புரிதல் மிக அவசியம். எனவே தம் மனநிலை என்ன என்பதை அவரிடம் வெளிப்படையாக பேசிவிட்டு தேவைப்பட்டால் சிறிது விலகி இருப்பதும் நலமே. அதை விட்டுவிட்டு நாமாகவே ஒரு கணிப்பை உருவாக்கி கொள்வது பெரும்பாலும் தவறான முடிவையே தரும்.

*** நட்பில் ஆண் பெண் இருவருக்குள்ளும் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருப்பதே நலம். எல்லை இல்லாத நட்பு என்பது சேரும்மிடம் தெரியாமல் பயணிப்பது போன்றது. நம்மை துயரில் ஆழ்த்த நாமே வழி அமைப்பதாகும். அர்த்தமற்ற தொடுதல்கள் இல்லாதிருப்பதே அவர்களுக்கும், சமுகத்தில் இருக்கும் அவர்கள் நட்பிற்கான அங்கிகாரதிர்க்கும் பாதுகாப்பாய் அமையும்.
மேலும் நட்பில் பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நன்று. ஏனெனில் உங்கள் ஆறுதலுக்காக உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இதர விஷயங்களை கூறினாலும் கேட்பவரின் உள்ளத்தில் உங்களை பற்றிய (நன்)மதிப்பு என்னும் உருவம் பதிந்துவிடும் வாய்ப்பு கிடைக்காதவரை மட்டுமே நல்லவர்களாக இருப்பவர்கள் வாழும் உலகம் இது. ஒரு நாள் உங்கள் சந்தோசம் கேள்விக்குறியாக மாறும் நிலையை ஊருவாக்கிவிடாதிர்கள்.
நினைவில் இருக்கட்டும் இன்று உங்கள் துயர் துடைக்கும் என நீங்கள் என்னும் நட்பு ஒரு நாள் உங்கள் செயல்களை குத்திகாட்டி பேச கூடும். ஆணோ பெண்ணோ உங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைத்தையும் தாண்டிய அந்தரங்கத்தை பகிராதிர்கள்.

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு சுதந்திரம் உண்டு நம் சுய எல்லைக்குள் எவரையும் அனுமதிக்க கூடாது. உதரணமாக என் தோழி தன் சக தோழியின் முன்பே தனது PIN no பதிவு செய்து ATM இல் பணம் எடுப்பாள் . ஒரு நாள் அவளது ATM அட்டையையும் காணவில்லை அவள் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் காணவில்லை. ஏன் இந்நிலை? தனக்கு கொடுக்கப்பட்ட ரகசிய என்னை பிறருக்கு காண்பித்தது தேவையா? இங்கு கவனிக்கப்படவேண்டிய மற்றொன்று ஒருவேளை சக தோழி தவறு செய்யாதவராக இருந்திருந்தால் அவளின் மிதான சந்தேக பார்வை நட்பையே குலைத்து விட்டது. மேலும் சிலர் தங்கள் மின்னஞ்சல் முகவரியின் பயனபெயர் கடவுப்பெயர் ஐ நண்பர்களிடம் கூறுகிறார்கள். இங்கு உங்களை பற்றியும், உங்களுக்குவரும் தகவல்கள் அனைத்தையும் தவறாக பயன்படுத்த வழிவகுப்பவராக மாறி விடுகிரிர்கள். நினைவில் இருக்கட்டும் மினஞ்சல் என்பது உங்கள் அந்தரங்கம் மட்டும் அல்ல உங்களை நம்பி தகவல்கள் அனுப்பும் உங்கள் தோழர்கள் / தோழிகள் / அலுவலர்கள் என பலரின் செய்திகளும் அடங்கியவை. உங்களை நம்பி தகவல் அனுப்புபவர்களின் நம்பிக்கையை காக்க வேண்டியது உங்கள் கடமை.

சந்தோசத்திலேயே மிக பெரிய சந்தோசம் மற்றவரை சந்தோசபடுத்தி பார்பதுதான். எப்போதும் கலகலப்பாக இருங்கள் பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் வாழ்கையில் வெற்றி தோல்வி இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதை உணருங்கள். தோல்வி, துக்கங்களை ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தயும், வெற்றி பெற்றால் சமநிலையில் இருக்கும் மனபக்குவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். ஆபத்து காலத்தில் நண்பனின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ளலாம், அதுபோல் தோல்வி ஏற்படும் போது உங்களை பற்றி முழுமையாக உணர்வீர்கள்.

எந்த பிரச்சனை வந்தாலும் வார்த்தைகளை விடாமல் இருப்பதே நல்லது. என்னெனில் "நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லை கொட்டினால் அல்ல இயலாது" கூறிய வார்த்தைகள் சாகும் வரை மறக்காது. காயபடுத்தும் குணம் சொல்லிற்கு மட்டும் அல்ல மவுனத்திற்கும் அதிகம் உண்டு. பிடிக்கவில்லை எனில் அதை கூறிவிட்டு பிரிவதும் பழகிய நடப்பிக்கு கொடுக்கும் மரியாதையே ஆகும்.

உங்கள் நண்பன்/நண்பியை அதிகம் நேசிக்காதிர்கள் என்னெனில் நாளை அவர்கள் உங்கள் விரோதியாக மாறலாம்..உங்கள் விரோதியை அதிகம் வெருக்காதிர்கள் என்னெனில் அவர்கள் நாளை உங்கள் நண்பன் ஆகலாம்..--கீதை

நட்பை ஒரு பறவையாக கருதுவோம், பறவை விரும்புவது சுதந்திரமாக பறப்பதையே நம்மீது அன்பு இருந்தால் அப்பறவை நம்மை தேடி நிச்சயம் வரும் எனவே நட்பை கூண்டிற்குள் அடைத்து காத்திட முடியும் என எண்ண வேண்டாம். அதற்கான சுதந்திரத்தை கெடுக்காமல் அதன் ஆனந்தத்தை கண்டு மகிழுங்கள்.

நண்பர் நண்பி தவறான பாதையில் சென்றால் அவர்கள் செய்வது தவறு என சுட்டிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. அதே சமயம் அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லையெனில் உங்கள் நிம்மதியையும் கெடுத்து கொள்ள வேண்டாம் ஆரோக்கியமான முறையில் கூறியும் கேட்கவில்லையெனில் நிங்களாகவே விலகிக்கொள்வதும் நன்மை பயக்கும்.

நட்பு இருவருக்குள் இருக்கும் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. இன்று நம்மை புரிந்து கொள்ளாமல் விலகி செல்பவர்களை கூட காலம ஒரு நாள் நம்மிடம் அற்புதமான நண்பர் / நண்பியாய் நமக்கு திருப்பி தரலாம், எனவே புரிந்துகொள்ளாத நட்பை காலத்தின் கைகளில் விட்டுவிடலாம்.

இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும் எனவே தவறு செய்து பின் திருந்தி வாழ என்னும் தோழமையை மனித்து மறந்து ஏற்றுக்கொள்வதே நலம்


"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
தவறு செய்தவரை தண்டிப்பது என்பது அவர்கள் செய்த தவறை எண்ணி வருந்தும் விதமாக அவருக்கு நன்மையை செய்வதாகும் (திருக்குறள் 314) .

எப்போதும் நல்ல எண்ணங்களையே வைத்திடுங்கள் விரோதிக்கும் நம்மையே செய்யுங்கள்.

ஒருவரை தண்டிப்பதற்கு முன் பல முறை யோசியுங்கள் ஒருவரை மனிப்பதர்க்கு ஒரு துளி கூட யோசிக்காதிர்கள் (அன்னை தெரசா).