Monday, June 7, 2010

கடவுளும் கந்தசாமியும்!!


கந்தசாமி தீவிர சிவ பக்தர். தினமும் காலை முதல் இரவு வரை இறைவனை வழிபட தவற மாட்டார். இருப்பினும் மனைவி மக்களுடன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வநதார். ஒரு சமயம் உமையவள் அவரது கஷ்டங்களை போக்கி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவ பெருமான் அவனது விதி படி அவன் இன்னும் சில ஆண்டு காலம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் அதுவரை அவனுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார். ஆனால் பார்வதி மனம் இதை ஏற்கவில்லை, எனவே பார்வதியை சமாதானபடுத்த சிவபெருமான் நீ வேண்டுமானால் கந்தசாமிக்கு உதவி செய் என்றார். பார்வதி கந்தசாமிக்கு உதவுவதற்காக சரியான தருணத்தை எதிர் நோக்கிகொண்டிருந்தார். ஒரு முறை கந்தசாமி தனது பணிகளை முடித்து விட்டு வீடு திரும்மி கொண்டிருந்தார். இரவு வேளையாக ஆகிவிட்டது. பார்வதி அவனுக்கு உதவுவதற்கு இது தக்க சமயம் அங்கு வேறு யாரும் இல்லை. கந்தசாமி செல்லும் வழியில் ஒரு மூட்டை நிறைய பொற்காசுகளை போட்டார்.
*********நமது கந்தசாமிக்கு திடீர் என ஒரு சிந்தனை, நாம் ஆரோகியமான உடலுடன் கை, கால்கள், இருந்தும் கஷ்டபடுகிறோம், ஆனால் உலகில் எவ்வளவோ மக்கள் இவைக்களுமின்றி, இதைவிட கஷ்டபடுகிரார்களே, சில நிமிடங்கள் நாமும் அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து பார்த்தால் என்ன? என தோன்ற, அது வரை ஒழுங்காக சென்றவன் அப்போது தனது கண்களை மூடி கொண்டு பார்வையற்றவர்போல் நடக்க ஆரம்பித்துவிட்டான்...............
***எங்கோ கேட்டது ***