Monday, April 19, 2010

கருணைக் கொலைகள்

பெண் குழந்தை பிறந்தால் நெல் மணிகளை வாயில் போட்டு பால் ஊற்றி கொன்றுவிடும் பழக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் பரவியிருந்தது விழிப்புணர்வு பிரசாரத்திலும், சிசுவதை தடுப்பு சட்டத்தை கடுமையுடன் அமல் படுதியதாலும் அந்த கொடுமை கட்டுக்குள் வந்தது. இப்போது, முதியவர்களை அவர்களின் குழந்தைகளே கொலை செய்யும் பழக்கம் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகிருக்கிறது. 80 வயது தாண்டிய பெரியவர் வீட்டில் மகன்களும் குடும்பத்தினரும் கூடி பேசி இருக்கிறார்கள். மறுநாள் பெரியவருக்கு 'தலைக்கூத்துதல்' நடத்தி, பிறகு சொத்துகளை பிரித்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததை கேட்ட பெரியவர் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பி வெளியூரில் உள்ள நண்பர் விட்டில் தஞ்சம் அடைந்தாராம். தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவது தலைக்கூத்துதல்- தலைக்கு ஊற்றுதல்- என்கிறார்கள். ஆரோகியமான உடலையும் பலவினமாக்கும் இந்த குளியல். அதோடு அந்த நபருக்கு இரண்டு கப் இளநீர் கொடுத்தால் ஜன்னி வரும்; சிறுநீரகம் செயலிழக்கும். புளித்த தயிர் ஊற்றிய பழையது கொடுப்பதும் உண்டு . பிறகு அந்த உடலில் உயிர் தங்காது. தென் மாவட்டங்களில் இது சகஜம் என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் சொல்கிறார். ஆனால் சொத்துக்காக செய்வதில்லையாம். 'ரெம்ப வயதாகி, நோயில் ஊடல் நலிந்து இழுத்துக் கொண்டிருக்கும் நபருக்கு அந்த சித்தரவதையில் இருந்து விடுதலை கொடுப்பது இந்த ஏற்பாடு. கருணை கொலை என்று வேண்டுமானால் சொல்லலாம்' என்கிறார் அவர். குடும்பத்தினர் உறவினர்கள் கூடி பேசி நல்ல நேரம் பார்த்து பேரக் குழந்தை கையால் 'ஒரு மடக்கு சூடான பால் கொடுத்து முடித்து வைப்பதும்' உண்டு என்கிறார்கள்.
கருணைக் கொலையை சட்டப்படி அங்கீகரிக்கலாமா கூடாதா என்ற விவாதம் மேலை நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும்போதே, இங்கே அது எந்தனையோ ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஓவ்வொரு சமூகமும் சில சம்பிரதாயங்களை கைக்குள் பொதிந்து பாதுகாக்கிறது. வெளியாருக்கு எட்டாத ரகசியங்களாக அவை தலை முறைகளை தாண்டி பயணிக்கின்றன.
[(மனித உரிமை கங்காணி Feb 2010) (தினகரன் 27.01.2010) ]

1 comment:

  1. உலகத்தில் சில இடங்கள்ள சாப்பிட சாப்பாடே கிடையாதாம், ஆனா இங்க பெண் சிசுவை கொல்றதுக்கு சாப்பாட்டு உணவான நெல்லை ஊபயோகபடுத்தி கொள்கிறார்கள் இது வேதனைக்குரிய விஷயம் - எனக்கு தெரியாத விஷயமும் கூட.

    in this type i can't accept this kind of murder.

    but i can accept in some times because elders in them last stage avanga romba marana vedhanai paduravangaluku inda karunai kolaia accept panurean.

    - சுஜி

    ReplyDelete